ஐரோப்பிய நாடான நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவு வாயில் அருகே இன்று (08.03 2026) அதிகாலை சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை சுமார் 01:00 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என நார்வே போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், தூதரகக் கட்டிடத்தில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகத் தெரிவதாகவும், இதற்கு காரணமானவர்களைத் தேடி வருவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடித்தப் போது ஏற்பட்ட சத்தம் மிக அதிகமாக இருந்ததாகவும், தூதரகப் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியதை பார்த்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் ஈரானுடன் நிலவி வரும் சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருந்தாலும் , அதற்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/08/norway-usa-embassy-2026-03-08-09-41-42.jpg)