பிரேசிலில் காலநிலை மாநாடு நடைபெற்று வருகிறது. இதனையொட்டி இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் உட்பட 20 பேர் மாநாட்டில் பங்கேற்றனர்.  இந்நிலையில் மாநாட்டு நடைபெற்று வரும் அரங்கில் நேற்று (20.11.2025) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 02:20 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Advertisment

விபத்துக்கான காரணம் குறித்து எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. இந்த தீ தீவிபத்தில் 13 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவரையும் உடனடியாக வெளியேற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் உத்தரவிட்டனர். முன்னெச்சரிக்கையாக பெவிலியனின் உட்புறத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Advertisment

இந்த தீவிபத்து ஏற்பட்ட போது மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.  இந்த தீ விபத்தை யடுத்து அமைச்சர் பூபேந்திர யாதவ் உட்பட இந்திய குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.