Advertisment

“எந்தெந்தத் தொகுதிகளில் போட்டி?” - தி.மு.க.விடம் உத்தேசப் பட்டியலை வழங்கிய ம.தி.மு.க.!

udhay-durai-vaiko-mks

கோப்புப்படம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில் தான் திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது மதிமுக. இந்த பட்டியலில் மொத்தமாக 16 தொகுதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 

Advertisment

அதில் மதிமுக ஏற்கனவே வெற்றிபெற்றுள்ள சில தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் நோக்கில் சில குறிப்பிட்ட தொகுதிகளைப் பட்டியலில் இணைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், சிங்காநல்லூர் அல்லது பல்லடம் அல்லது கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் அந்த கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

மேலும், கடலூர் அல்லது புவனகிரி இவற்றில் ஏதேனும் ஒரு தொகுதி கிடைக்கப்பெற்றால் மதிமுகவின் முக்கிய தலைவர் செந்தில் அதியமான் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும், மதுரை தெற்கு தொகுதியும் அப்பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடையநல்லூர் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பாளையங்கோட்டை தொகுதியை நெல்லை மாட்டச் செயலாளர் நிஜாமிற்கு வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அடுத்து, திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை தொகுதிகளையும் உத்தேச பட்டியலில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

vaiko-mks-meet-sons
கோப்புப்படம்

மேலும் சிவகாசி அல்லது விருதுநகர் தொகுதியை ரவிச்சந்திரன் அவர்களுக்குப் பரிந்துரைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அதே போல, கடந்த முறை வெற்றி பெற்ற சாத்தூர் தொகுதியையும் கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோக, கோவில்பட்டி, மொடக்குறிச்சி மற்றும் தளி போன்ற தொகுதிகளும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் எத்தனை சீட்டுகளை வழங்க இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான், தொகுதிகள் ஒதுக்கீடு என்பது இறுதி செய்யப்படும் என்றும் கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

dmk mdmk Alliance Assembly Election 2026
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe