Advertisment

இ.பி.எஸ். முன்னிலையில் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்!

pm-mannnan

விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் படுவேகமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் வெற்றியைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பல்வேறு முடிவுகளை எடுத்துவருகின்றன. அதே நேரத்தில், சில முக்கிய அரசியல் பிரபலங்கள் ஒரு கட்சியிலிருந்து விலகி மற்ற கட்சியில் இணையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 

Advertisment

அந்த வகையில், சமீபத்தில் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சிலர் திமுகவில் இணைந்தனர். இது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், திமுகவின் ஆதரவாளரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான பி.எம். மன்னன் தனது ஆதரவாளர்களுடன் இன்று (17.02.2026) அதிமுகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisment

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியில் இல்லத்திற்கு வருகை தந்த பி.எம். மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். தற்போது அதிமுகவில் இணைந்துள்ள பி.எம். மன்னன் மிக நீண்டகாலமாக திமுகவில் இருந்து வந்தார். மதுரையின், முன்னாள் துணை மேயராக இருந்த அவர், கடந்த காலங்களில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். மதுரையில், திமுகவின் முக்கிய முகமாகப் பார்க்கப்பட்ட அவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டார். அதன் பின்னர், எந்த கட்சியிலும் பயணிக்காமல் இருந்த அவர் தொடர்ந்து திமுக ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். 

pm-mannnan-1

இதனிடையே பல முறை தன்னை திமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்து வந்தார். இருப்பினும், திமுக தரப்பில் எந்தவிதமான பதிலும் வரவில்லை. இதையடுத்து, முதல்வருக்குத் தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ளக் கடிதம் வழங்கியிருந்தார். இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அதிமுகவில் இணைந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே, தவெக மற்றும் பாஜக உள்ளிட்ட பல கட்சிகளிடமிருந்து இவருக்கு அழைப்பு வந்ததாகவும், இருப்பினும் அந்த கட்சிகளில் இணைய அவர் விருப்பம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, மதுரையில் அதிமுகவின் அறியப்பட்ட முகங்களாக செல்லூர் ராஜு, உதயகுமார் போன்றவர்கள் உள்ள நிலையில் இவரது வருகை, மேலும் அதிமுக வலுவடைய ஏதுவாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

dmk admk edappadi k palaniswami madurai mk alagiri
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe