தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து தேர்தல் அறிக்கையையும், தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

இதனிடையே திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்குள், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும், ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை குரல் காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisment

இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற கேள்வி நீடித்து வருகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கண்டிப்பாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் தெளிவாக கூறி வருகின்றனர். இதனிடையே, விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் களத்தில் புதிய ஊகங்களுக்கு வழிவகுத்தது. திமுகவில் இருந்து விலகி, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற விவாதம் எழுந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (17-01-26) டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற உள்ளனர். இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்பது? எந்தெந்த தொகுதிகள் கேட்பது? உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment