Advertisment

இஸ்லாமாபாத் மசூதியில் நிகழ்ந்த சம்பவம் : வெளியான முக்கிய தகவல்!

pak-islamabad-ins-mosque

பாகிஸ்தான் நாட்டின் தலைஞர் இஸ்லாமாபாத்தின் ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று (06.02.2026) தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மசூதி அருகே திடீரென பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே 31 பேர் உயிரிந்தனர். மேலும், காயமடைந்த 160க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது தற்கொலைப் படை என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் ஷியா மற்றும் சன்னி என்ற இரு பிரிவினர் அவ்வப்போது மோதிக்கொள்ளும் சம்பவம் என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் வழிபடும்மசூதி அருகே தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இச்சம்பவத்திற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக  மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “ இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு கண்டனத்திற்குரியது. 

Advertisment

மேலும் இதனால் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு இந்தியா இரங்கல் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் தனது சமூகக் கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள்வதற்குப் பதிலாக, தனது சொந்த நாட்டில் வளர்ந்து வரும் தீமைகளுக்கு மற்றவர்களைக் குறை கூறி தன்னை ஏமாற்றிக் கொள்ளத் தேர்வு செய்வது துரதிர்ஷ்டவசமானது. இந்தியா இதுபோன்ற எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறது. இது எந்த அளவுக்கு அடிப்படையற்றதோ அதே அளவுக்கு அர்த்தமற்றது. இந்நிலையில்இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததும், 169 பேர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Islamabad Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe