Advertisment

கார் குண்டுவெடிப்பு சம்பவம்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

union-cabinet-file-image

கோப்புப்படம்

தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, கடந்த 10ஆம் தேதி (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு காரில் இருந்த வெடிகுண்டுகளே காரணம் என டெல்லி போலீசார் உறுதிப்படுத்தியிருந்தனர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தி வரும் பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று (12.11.2025) மாலை நடைபெற்றது. பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த  கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நவம்பர் 10, 2025 அன்று மாலை டெல்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததற்காக அமைச்சரவை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.

Advertisment

அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

dl-car-ins-file-1

2025 நவம்பர் 10 அன்று மாலை செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பின் மூலம் தேசவிரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவத்தை நாடு கண்டுள்ளது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த உணர்வற்ற வன்முறைச் செயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சரவை தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும்  தெரிவித்துக் கொள்கிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவசரகால உதவியாளர்களின் உடனடி முயற்சிகளையும் அமைச்சரவை பாராட்டுகிறது.

அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை அமைச்சரவை வன்மையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அமைச்சரவை மீண்டும் வலியுறுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள பல அரசுகள் வெளியிட்ட ஆதரவு அறிக்கைகளுக்கு அமைச்சரவை தனது பாராட்டுகளைப் பதிவு செய்தது. துயரமான தருணத்திலும் கூட சரியான நேரத்தில், தைரியத்துடனும் கணிவுடனும் செயல்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை அமைச்சரவை பாராட்டுகிறது. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வு மிகவும் போற்றத்தக்கது.

dl-car-1

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மிகவும் அவசரமாகவும், தொழில்முறை ரீதியாகவும் தொடர வேண்டும் என்று அமைச்சரவை அறிவுறுத்துகிறது. இதனால் குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அரசின் உயர் மட்டங்களில் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. தேசிய மற்றும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்கும் அதன் நீடித்த அர்ப்பணிப்புடன், அனைத்து இந்தியர்களின் உயிர்களையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கான அரசின் திடமான உறுதிப்பாட்டை  அமைச்சரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Narendra Modi UNION CABINET MEETING UNION CABINET Delhi CAR INCIDENT
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe