Advertisment

அண்ணாமலைப் பல்கலை. பட்டமளிப்பு விழா : போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முக்கிய முடிவு!

au-pro

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆசிரியர், ஊழியர் பதவி உயர்வு, ஓய்வு பெற்று 14 மாதம் ஆகியும் ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் வழங்காததை உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய வேண்டும், ஆசிரியர்களின் ஏழாவது ஊதிய குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

ஆர்ப்பாட்டத்திற்கு போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் ஊழியர் சங்கத் தலைவர் ரவி, ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் அசோகன், செல்வராஜ், செல்ல பாலு,  முத்து வேலாயுதம், ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் சியாம் சுந்தர், தேவேந்திரன், கோவிந்தராஜன், ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் மதியழகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Advertisment

இந்த போராட்டத்தில் வரும் 21ஆம் தேதி அனைத்து ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியர்கள் விடுப்பு எடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் இருப்பது என்றும், கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு தேர்தல் பணிகளை புறக்கணிப்பு செய்வது, பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பது என அறிவித்துள்ளனர்.

Annamalai University Chidambaram Cuddalore employees graduation day
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe