முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், டி. கீரனூர் ரவுண்டானாவில் புதியதாக நிறுவப்பட்டுள்ள 126 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்தார். இதையடுத்து 5,371 ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisment

அஇஅதிமுக ஐசியூவில் போய்விடும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு இபிஎஸ், ‘’உதயநிதி ஸ்டாலின் அவர்களே, உங்கள் பேச்சுக்கு நாங்கள் பதில் பேச ஆரம்பித்தால் அது அசிங்கமாகப் போய்விடும். நான் கையை நீட்டிப் பேசுகிறேன். என் விரல் ஆடுகிறதா..? சில பேருடைய விரல்கள் ஆடுகின்றன. அது யாருடைய விரல் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களைப் பார்த்தா ஐசியூ என்று சொல்கிறீர்கள்.

எங்கள் உடம்பு வலிமையானது. இங்கே இருக்கும் அத்தனை பேரும் உழைத்து உடலை உறுதியாக வைத்திருக்கிறோம். எனவே, பேசும்போது நிதானமாகப் பேச வேண்டும். எதை பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள். எங்களுக்கும் நாக்கு இருக்கிறது, எங்களுக்கும் சிந்தனை இருக்கிறது. நாங்கள் பேச ஆரம்பித்தால் தாங்கிக்கொள்ள மாட்டீர்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுகவை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வையுங்கள்’’ என்று கடுமையான பதிலடி கொடுத்தார்.