illegal packets smuggled from Karnataka seized
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சுங்கச்சாவடியில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூர் பொம்மாவில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த டாடா இன்பிரா லோடு ஆட்டோவை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அதனை சோதனையிட்டதில், சுமார் 750 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த வாகனத்தின் ஓட்டுநரான திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் ராஜேஷ் கண்ணன் (26), மற்றும் இருசக்கர வாகனத்தில் வழிகாட்டியாக வந்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி மகன் ஜோஸ்வாராஜா (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகையிலைப் பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Follow Us