கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 02.11.2025 இரவு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் சூடுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் அந்த பெண் ஏன் அந்த நேரத்தில் பாதுகாப்பு இல்லாத பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்ற கருத்தை நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி வைத்திருந்தார். இந்த கருத்து பிற்போக்குத்தனமான ஒன்று மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிரான கருத்து என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கட்சி நிகழ்ச்சில் கலந்துகொள்ள வந்த நடிகை கஸ்தூரியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ''என்னது நான் விக்கிடீமுக்கு எதிராக, அந்த பெண்ணுக்கு எதிராக இருக்கேனா? நீங்க அப்படி சொன்னாக்கூட பரவாயில்லை. நான் ஒரு பதின்ம வயது டீனேஜ் பெண்ணின் தாய். கொஞ்சம் பொது அறிவோடு இருக்க வேண்டும். ஒரு சுதாரிப்புடன் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அது எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் இருக்கலாம் வியாபார நோக்கமாகவும் இருக்கட்டும், இல்ல அமர காதலாகக் கூட இருக்கட்டும் என்ன கன்றாவியோ இருக்கட்டும். ராத்திரியில் தேவையில்லாத இடத்திற்கு போவது தவறுதான்.
கம்பைன் ஸ்டடி பண்ண வேண்டும், வெறுமனே பேச வேண்டும் என்று சொன்னால் எத்தனையோ பாதுகாப்பான இடங்கள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ரொம்ப முடியவில்லை, தவிர்க்க முடியவில்லை பண்ணியே தீர வேண்டும் பேச்சுவார்த்தை என்று சொன்னால் ரூம் போட்டுக் கூட பேசிக்கோங்க. பெண் போகக் கூடாது என்று சொன்னேனா அதேபோல ஆணுமே போகக்கூடாது. யாருமே போகக் கூடாது. நான் ஒரு பெண்ணையும் மகனையும் பெற்ற தாயாக சொல்கிறேன். நாட்டில் பாதுகாப்பு இல்லை. இது சிங்கப்பூர் கிடையாது. சிங்கப்பூர் ஆகுற வரைக்கும் நீங்கள் எல்லாம் உங்கள் பாதுகாப்பை கொஞ்சம் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எத்தனையோ பெற்றோர்கள் வாயக் கட்டி வயிற்றைக் கட்டி கனவுகளோடு உங்களை படிக்க அனுப்புகிறார்கள். படிக்க போ என்று சொன்னால் நீங்கள் செய்வது என்ன? நான் சொல்வது பெண்ணியதிற்கு எதிரானது என்று சொன்னால் அந்தப் பெண்ணியமே வேண்டாம். உங்களுக்கு தேவை சுதந்திரம் தானே இதோ இந்தியா பெண்கள் அணி வேர்ல்ட் கப் ஜெயிச்சிருக்காங்க அந்த மாதிரி காட்டுங்க. படித்துப் பெரிய ஐஏஎஸ், இன்ஸ்பெக்டர் ஆகுங்கள். கலெக்டர் ஆகுங்கள். புது சோசியல் சர்வீஸ் பண்ணுங்க. டீச்சராகுங்கள் அதில் உங்கள் சுதந்திரத்தை காட்டுங்கள். நடுராத்திரியில் போய் யாருடனோ காரில் உட்கார்ந்து கொண்டிருப்பதில் ஏன் உங்கள் சுதந்திரத்தை காட்டுறீங்க. சாரி.. இதனை சொன்னால் அதற்கு நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/08/050-2025-11-08-16-43-46.jpg)