'If you want to get mangoes through a roundabout way...' - Ramadoss seeks court Photograph: (PMK)
பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம், தொடர்பாக அன்புமணி உரிமை கோரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ள ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையில் நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த கேவியட் மனுவில், 'பாமகவின் தலைமை அலுவலக முகவரியை ராமதாஸுக்கு தெரியாமல் மாற்றியதைப் போல கட்சியின் பெயர், கட்சியின் சின்னமான மாம்பழம் ஆகியவற்றை குறுக்குவழியில் பெறுவதற்காக யாரேனும் நீதிமன்றத்தை நாட முயன்றால் எங்களுடைய தரப்பு கருத்துக்களை கேட்காமல் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது' என உத்தரவிடக் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Follow Us