'If you want to expel...?''- Rajendra Balaji warns the Department of Charities! Photograph: (admk)
ராஜபாளையம் அருகே கலங்காபேரிபுதூர் கிராமத்தில் வசிக்கும் 62 குடும்பங்களும் காலி செய்யும்படி ஆண்டாள் கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், அம்மக்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ஸ்ரீ ஆண்டாள் கோவில் சம்பந்தப்பட்ட 40 ஏக்கர் நிலத்துல இங்க இருக்கிற தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் 300 வருஷமா குடியிருந்து வர்றாங்க.. விவசாயமும் பண்ணிட்டு இருக்காங்க. இது சம்பந்தமா 100 ஆண்டுகளுக்கு முன்பே கீழ ராஜபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டிருக்கு. அதுலகூட இங்க இருக்கிற மக்கள் காலி செய்யக்கூடாது என்ற வார்த்தையை சேர்த்து பதிவு செய்து. இந்த மக்களுக்காக இந்த இடத்தை கொடுத்து அப்போதுள்ள ஜமீன்தார்கள் பண்ணிருக்காங்க. ஆனால் இப்போது இருக்கிற அரசு அறநிலையத்துறை அதிகாரிகள் இங்கே கல் போட்டு அளந்து இது அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட நிலம், ஆண்டாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடம், இந்த இடத்துல குடியிருக்கிறவங்க காலி பண்ணனும்னு சொல்லி இவங்ககிட்ட தவறான தகவலைச் சொல்லி.. ஒரு வருஷத்துக்கு முன்னாடி அட்ரெஸ், போன் நம்பர், செல்போன் நம்பர் எல்லாம் வாங்கி, ஒரு அபிடபிட் தாக்கல் செய்து.. ஒரு தீர்ப்பை பெற்று இவங்கள காலி செய்யிறதுக்கு தேவையான நடவடிக்கையை எடுத்துட்டு வர்றாங்க. இதை தெரிஞ்சுகிட்ட இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் என்கிட்ட தகவல் சொன்னாங்க.
இங்க இருக்கிற மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி வாழக்கூடிய விவசாயிகள்.இவங்களுக்குன்னு அறநிலையத்துறை கோவில் சம்பந்தப்பட்ட இடம் 40 ஏக்கர் இருக்கு. அதுல விவசாயம் பண்ணுறாங்க. அதற்கு இன்று வரை எந்தவித குத்தகை பாக்கியும் இல்லாமல் ஆண்டாள் கோவிலுக்கு குத்தகை பணம் கட்டிட்டு வர்றாங்க. மீதி இருக்கிற இடங்கள்ல இங்க இருக்கிறவங்க 300 வருஷமா குடியிருக்காங்க. 100 ஆண்டுகளுக்கு முன்பு 1924லயே பத்திரம் பதிவாகிருக்கு. ஆக இங்க இருக்கிற மக்களை வெளியேற்றுவதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இந்து அறநிலையத்துறைக்கு கிடையாது.
ஆண்டாள் நாச்சியாருக்கு குடியிருக்கிறதுக்கு எத்தனையோ ஆயிரக்கணக்கான ஏக்கர் இருக்கு. ஏழைகள் வாழக்கூடிய, தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வாழக்கூடிய, விவசாயிகள் வாழக்கூடிய, விவசாயத் தொழில் செய்கிற மக்கள் வாழக்கூடிய, இந்த வீடுகளைத்தான் அச்சுறுத்தி வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தால், அதை அதிமுக கடுமையாக எதிர்க்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக உரிமைக்கு குரல் கொடுக்கிறதுக்கு எனது தலைமையில் இதற்காக முன்னின்று போராடுவோம். நாங்கள் வெற்றி பெற்று அம்மக்களுக்கு பட்டாக்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை அதிமுக பொதுச் செயளாளார் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செய்து கொடுப்போம்” என்றார்.
Follow Us