'If you try to impose your opinion on me, you will only get angry' - Seeman interview Photograph: (seeman)
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் பனையூர் இல்லத்திற்கு சென்றுள்ளார். நாளை அவர் தவெக கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பரமக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் சீமான் இது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''அது அவருடைய விருப்பம். தமிழ்நாட்டில் ஒரு மூத்த அரசியல்வாதியாகவும் தலைவராகவும் செங்கோட்டையன் இருந்துள்ளார். இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. அவர் வேறு ஒரு கட்சிக்குப் போகும்போது இந்த கட்சியில் இருந்து பெற்ற பதவி தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். அதனால் பதவியை ராஜினாமா செய்திருக்கலாம்'' என்றார்.
தினம் செய்தியாளர்களைச் சந்திக்கிறோம். எல்லார் மேலேயும் நான் கோபப்படவில்லையே. நாம் சொல்ற பதிலை உள்வாங்காமல் மரியாதையா பேசுங்க என்கிறார். நாம் என்னவோ மரியாதை கெட்ட மாதிரி பேசினால் கோபம் வருமா வராதா? நான் ஒன்றும் ஆசிரமங்கள் மடங்களில் இருந்து வரவில்லை பரமக்குடி மண்ணில் இருந்து போயிருக்கேன். எப்படிப்பட்ட ஊரென்று உங்களுக்கு தெரியும். ஒரு காட்டான். கொஞ்சம் கொஞ்சமா எங்களைக் கட்டுப்படுத்தி பக்குவப்பட்டு நாங்க மேல ஏறிட்டு இருக்கோம். நீங்க ஒரு கட்சி சார்ந்து இருந்துக்கறீங்க, உங்கள் கருத்தை எனக்குள்ள திணிக்க நினைக்கிறீர்கள் அதனால் வரும் கோவம்தான் இது'' என்றார்.
Follow Us