தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

இன்று மூன்றாவது கட்டமாக கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் செல்கிறார். காலை நாமக்கலிலும் மாலை கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியிலும் மக்கள் சந்திப்பு பயணம் நடைபெற உள்ளது. விஜய் வருகையை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

Advertisment

விஜய் வருகையை ஒட்டி ரசிகர்கள், தொண்டர்கள் அதிகமாக குவிந்து வருவதால் உயர்ந்த கட்டிடங்கள், மின் கோபுரங்கள், மரங்கள் ஆகியவற்றில் ஏறக்கூடாது. அதேபோல பிறர் மனம் புண்படும் படி யாரும் பேசக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் சிலர் பேட்டியளித்தனர். ''விஜய் எங்களுடைய உயிர். மற்ற கட்சிகளில் செல்பவர்கள் எல்லாம் காசுக்காக செல்பவர்கள். ஆனால் நாங்கள் காசை விட்டுவிட்டு வந்தவர்கள். விஜய் பேச மாட்டார் செய்துவிட்டு தான் சொல்வார். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்தீர்கள் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். கொடுத்துப் பாருங்கள் ஜெயிச்சு காமிப்பார். நல்லது செய்வார். எங்களுடைய கூட்டத்திற்கு அனுமதி தராமல் பிரச்சனை செய்கிறார்கள். ஒருவர் மேலே வருகிறார் என்றால் தோல்விதான் வெற்றிக்கு முதல்படி. கஷ்டப்பட்டு மேலே வருகிறார் என்றால் அவர்களை அடித்து அடித்து உட்கார வைப்பார்கள்'' என்றனர்.

Advertisment

'என்ன நம்பிக்கை இருக்கிறது 2026 விஜய்க்கு ஆட்சி அமைப்பார் என்று?' என்ற கேள்விகளுக்கு ஏன் 2026-ல்  உலகம் அழிகிறது என்றால் நம்புகிறீர்கள் விஜய் ஜெயிப்பார் என்று சொன்னால் நம்ப மாட்டீர்களா?' என்று கேள்வி எழுப்பினர்.