'If you perform puja with tamarind...' - Money scam as a remedy Photograph: (police)
திருமண தோஷம் நீங்க வேண்டும் என்றால் நகையை புளிக்குள் வைத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி நகை மற்றும் பணத்தை மோசடி செய்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரியில் திருமண தோஷம் நீங்க வேண்டுமென்றால் சமைப்பதற்கு பயன்படுத்தும் புளியில் நகையை வைத்து பூஜை செய்ய வேண்டும் என பரிகாரம் செய்ய வந்த இருவர் தெரிவித்துள்ளனர். இதை நம்பி ஒரு குடும்பத்தினர் பூஜையில் ஈடுபட்ட பொழுது அவர்களிடமிருந்து ஒரு சவரன் நகை மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை அந்த நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பூஜை செய்வதாக ஏமாற்றி மோசடி செய்து இரண்டு பேரையும் நெல்லையில் வைத்து போலீசார் கைது செய்த சிறையில் அடைத்துள்ளனர்.
Follow Us