Advertisment

'அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி கேளுங்க ஆளுநரே'-அன்பில் மகேஷ் பதில்

A4863

'If you care, ask Delhi, Governor' - Anbil Mahesh responds Photograph: (DMK)

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை சார்பாக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்திற்கான அழைப்பு கொடுக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் ஆளுநர் மாளிகை அழைப்பை  திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தன.
Advertisment
ஆளுநர் மாளிகை சார்பில் வெளியாகியுள்ள சுதந்திர தின விழா செய்திக்குறிப்பில், தமிழக அரசு மீது காட்டமான சாடல்களை வைத்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அதில், 'சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆன பிறகும் பாகுபாடு உள்ளது நாம் அவமானப் படக்கூடியது. தமிழ் மொழி, கலாச்சாரம் என்பது நமது தேசத்தின் பெருமைகள். ஆனால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக நான்கு சவால்கள் உள்ளன.
அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம் நடக்கிறது. பொதுப்பாதையைப் பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல் ரீதியாக தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. வேலைவாய்ப்பின்றி வெறும் படிப்பு சான்றிதழ் பெற்றவர்களாகவே மாணவர்கள் வெளியேறுகிறார்கள். தமிழ்நாட்டில் ரயில்கள், சாலை வசதிகள் என மத்திய அரசு பல நலத்திட்டங்கள் செய்து வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநரின் அழைப்பைப் புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில் ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். 'எக்ஸ்' வலைத்தளத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர் அவர்களே…!
Advertisment
ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, “நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்” என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது. எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் தமிழக அரசும் கொண்டாடி வருகிறது.
கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
R.N.Ravi TN governer anbil mahesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe