'If Seeman doesn't stop now...' - TTV. Dinakaran, Jayakumar warn Photograph: (ADMK AMMK)
நேற்று (26/09/2025) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''விஜய்யின் பயணங்களுக்கு மழை இடையூறு இல்லாமல் உதவ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவர் கட்சி, அவர் எப்படி கையாள வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை செய்யட்டும். சொன்னார்களே, செய்தார்களா? என்று பேசுகிறார். ஊரில் தண்டல்காரன் பேசுவது போல் அவர் பரப்புரை செய்கிறார். இதெல்லாம் ஒரு பரப்புரை என்று நினைக்கிறீர்கள். மக்களின் வலியை மனதில் இருந்து ஒருவர் மொழியில் எடுத்த பேச முடியவில்லை என்றால் இதெல்லாம் பரப்புரையா?.
விஜய் தற்போது பிரச்சாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டி கொண்டு இருக்கிறார். திமுகவிடம் 2 இட்லி, அதிமுகவிடம் 2 தோசையை எடுத்து பிச்சுப்போட்டு உப்புமா கிண்டிருக்கிறார். இங்கே அண்ணாவை வைத்திருக்கிறார், அங்கு எம்.ஜி.ரை வைத்திருக்கிறார். இதில் என்ன மாற்றம் இருக்கிறது?. இது ஒரு சனியன், அது ஒரு சனியன் இரண்டு சனியன்களை எடுத்து போட்டு சட்டையை போட்டிருக்கிறார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பிவிடுகிறார்” என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.
எம்ஜிஆர் குறித்து சீமான் பேசியது சர்ச்சையான நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சீமானை கண்டித்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து சீமான் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சீமானை விட நன்கு பேசத்தெரிந்த பலர் அதிமுகவில் இருக்கின்றனர். சீமான் எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசுவதை நிறுத்தவில்லையெனில் அதிமுகவின் பதிலடி கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விஜய் மீது சீமானுக்கு கோபம் இருந்தால் அவரைப் பற்றி பேசட்டும். ஆனால் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி அவதூறு பேச வேண்டாம். சீமானின் நாக்கில் சனியன் குடியிருக்கிறது. விஜய்யின் வருகையால் ஏற்பட்ட பாதிப்பில் சீமான் தடுமாற்றத்தில் உள்ளார்' என கண்டனம் தெரிவித்துள்ளார்.