Advertisment

'கஸ்தூரி பேசினால் வழக்கு கமல் பேசினால் மட்டும் பாராட்டா?'-ஆவேசமான பாஜக கஸ்தூரி

308

'If Kasturi speaks, will you accept it only if Kamal speaks?' - Angry BJP Kasturi Photograph: (kamal)

நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், மாநிலங்களவையில் கடந்த 4ஆம் தேதி பேசினார்.

Advertisment

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுக்கும் வகையில் கமல்ஹாசனின் கன்னிப்பேச்சில், “நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக்குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்த நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழைப் பார்த்து என்ன சொல்லுகிறீர்கள் தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மை தான். தந்தாய் தமக்கென உங்கள் நீதியைத் திரட்ட ஆங்கிலத்தில் இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது' என அதிரடியாகப் பேசி இருந்தார்.

Advertisment

தமிழிசை, வானதி ஸ்ரீனிவசன் போன்றவர்கள் கமல்ஹாசனை திமுக எம்பி ஆக்கியதே தவறு என்ற விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் கஸ்தூரியிடம் செய்தியாளர்கள் கமல்ஹாசனின் நாடாளுமன்ற உரை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கஸ்தூரி, ''கமல் பேச்சு சரி என்று சொல்லும் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கே கமல் பேசியது புரியவில்லை. புரிந்திருந்தால் வரவேற்று சரி என்று சொல்லமாட்டார்கள்.

மக்கள் நீதி மய்யம்  கட்சியினருக்கு பெரியாரையும் தெரியவில்லை. கமலையும் தெரியவில்லை. கமல் என்ன பேசினார் என்பதும் தெரியவில்லை. அதனால் குருட்டுப் போக்காக என சுமையை தூக்கி முட்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் உண்மை. கமலின் பேச்சு குறித்து ஒரு வீடியோ போட வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன். தெலுங்கை அவமதித்து தான் தன்னுடைய பேச்சை கமல் தொடங்குகிறார். ஆனால் இந்த திமுக அரசுக்கு பொய்யாக கஸ்தூரி மேல் தெலுங்கு மக்களை பேசினார் என்று  வழக்குப்போட தெரிகிறது. ஆனால் தியாகராஜர் தெலுங்கில் பிச்சை எடுத்தார் என்று பேசிய கமலை பாராட்ட  தெரிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

b.j.p kasthuiri parliment Kamalhasaan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe