Advertisment

இடைக்காட்டூர் சம்பவம் : இ.பி.எஸ்.ஸுக்கு சிவகங்கை மாவட்டக் காவல்துறை விளக்கம்!

eps-tn-police

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தில் நிகழ்ந்த சம்பவத்தை குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக அவர்  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Advertisment

இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே?. திமுக அரசின் குற்றவாளிகள் கைது நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் சமூக அநீதி திமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

Advertisment

இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? முடிந்துவிட்டது என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். ஆமாம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே.... உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது. பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது. சமூகநீதி முடிந்துவிட்டது. மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது. இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய ஆட்சிக்கு முடிவு கட்டுவதே.

arrest

அதை மிக விரைவில் தமிழக மக்கள்  சிறப்பாக செய்ய காத்திருக்கிறார்கள். இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள்காட்டி சிவகங்கை மாவட்டக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “கடந்த 03.03.2026ஆம் தேதி மாலை மானாமதுரை இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இராசு மற்றும் அவருக்கு நன்கு தெரிந்த நண்பர்களான செட்டிக்குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் வே.புதுக்குளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோரிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக மகேஸ்வரன் அவரது நண்பர்களுடன் இடைக்காட்டுரைச் சேர்ந்த இராசுவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதில் இராசுவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மானாமதுரை காவல் நிலைய .91/26, f. 191(2), 191(3), 296(b),118(1), 109(1), 351(3) BNS, 3(1)(r), 3(1)(s)3(2) (va) SC/ST POA ACT கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறையினரின் துரித நடவடிக்கையின் மூலம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ நடைபெற்ற பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

incident edappadi k palaniswami admk law and order explanation sivagangai district police sivagangai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe