தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் இன்று (31.10.2025) வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், “இரா. கண்ணன், மாநில மனித உரிமைகள் ஆணையம் செயலாளர் மற்றும் தமிழ்நாடு நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் (முழு கூடுதல் பொறுப்பில்) துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். சா.ப. அம்ரித், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
ச.கவிதா, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். சி. முத்துக்குமரன், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையின் (பேரிடர் மேலாண்மை) இயக்குநராக நியமிக்கப்படுகிறார். ப்பி.எஸ். லீலா அலெக்ஸ், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) உறுப்பினர் செயலளராகவும், சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் (Chennai River Transformation Company Ltd) மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்படுகிறார். மு. வீரப்பன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்படுகிறார். இரா. ரேவதி,, உயர்கல்வித் துறையின் அரசு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us