ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக டிஜிபியாக இருந்த பிரமோத் குமார் ஊர்க்காவல் படை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை ஐ.ஜியாக இருந்த ஜெயஸ்ரீ குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி ஆயுஷ் மணி திவாரி மின் உற்பத்தி கழக ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.