Advertisment

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தால் வரவேற்பேன்; திருச்சி விமான நிலையத்தில்  தொல்.திருமாவளவன் பேட்டி!

T

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு மதுரையில் இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான  திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

Advertisment

அப்போது அவர் பேசியதாவது... அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை  பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.தேர்தல் காலத்து வாக்குறுதிகள் வழக்கமான வாக்குறுதிகள். திமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன், இருந்தாலும் கூட இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திமுக எதிராக அதிமுக அறிவித்திருக்கிறது என்கிற புரிதல் மக்களுக்கு இருக்கும் எனவே தேர்தல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

Advertisment

நிதி நிலைமை இப்படி இருக்கும் பொழுது இலவசம் அறிவித்தால் மாற்றத்தை தேடி மக்கள் செல்ல மாட்டார்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்... இலவசங்கள் கூடாது என்ற கருத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். கல்வி, மருத்துவத்தை தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது எனக் கூறியுள்ளோம். திமுக மகளிர் மேம்பட்டுக்காக, மாணவச் செல்வங்களை மேம்படுத்துவதற்காக உரிமை தொகையை வழங்குகிறது. சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கிற அல்லது காலகாலமாக வஞ்சிக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற, அதிகாரம் இல்லாமல் இருக்கின்ற நிலையில், அவர்களை மேம்படுத்தும் என்ற நிலையில் அந்தத் திட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்றது. 

இதனால் ஏற்படுகிற நிதிச்சுமை என்பது சமாளிக்கதக்க கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் இந்த நிலைப்பாட்டை திமுக மேற்கொண்டு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். கடந்த காலத்தில் கடுமையாக நிதி நெருக்கடி சூழ்நிலையிலும் மத்திய அரசு, மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி பங்கீட்டை ஒதுக்காமல் தவிர்த்தும் கூட, தமிழகத்தின் மொத்த உற்பத்தி ஜிடிபியை தமிழக அரசு உயரச் செய்து இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும்.

ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பொருளாதாரத்தில் செயல்படுகிற நிலையில் அதனை மக்களுக்கு வழங்குகின்ற ஒரு திட்டமாக இதனை பார்க்க கூடாது என்ற கேள்வியும் எழுகிறது. பெரிய தொகை இல்லை என்றாலும் கூட அனைவருக்கும் உரிய நேரத்தில் பொருள் உதவி வழங்கப்படுகிற பொழுது அதற்கான பொருளாதார வாய்ப்பை உருவாக்கி தரும் என்கிற வகையிலும் இந்த கோணத்திலும் இதை அணுக வேண்டும் என்று நான் பார்க்கிறேன்.

தவெக தலைவர் விஜய் யார் கூறுவதையோ, எழுதிக் கொடுப்பதையோ பேசுகிறார். திமுக எதிர்ப்பை மட்டுமே அவர் பேசுகிறார். கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை வரை அவருக்கு அஜெண்டாவாக உள்ளது, திமுக எதிர்ப்பு மட்டும் தான். திமுக எதிர்ப்பு என்றாலும் மாற்றுக் கருத்து இல்லை. செயல் திட்டம் என்ன, யாருக்காக கட்சி தொடங்கினார் என்று எந்த இடத்தை நோக்கி அவர் பயணிக்கிறார் என தெரியவில்லை. இதுவரை அரசியல் களத்தில் இருக்கிற என்னைப் போன்றோர் புரிந்து கொள்ள முடியவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறதா?

ஒவ்வொரு கட்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதியைப் பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது பார்க்கலாம் எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இயலாதவாறு பார்த்துக் கொள்வது எங்களுக்கான பொறுப்பு, கடமை விமர்சனம் இருக்கலாம்.
ஆனால், எங்களது கூட்டணி கட்டுக்கோப்பா இருக்கும். தொகுதி பங்கிட்டால் எந்த சிக்கலும் இருக்காது.

திமுக கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் தெரிவித்துள்ளார என்ற கேள்விக்கு?

இந்த கேள்விக்கு விஜய் தான் தலைமையான கட்சியினர் தான் பதில் கூறவேண்டும். ஓ பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர். சகிப்புத்தன்மை உள்ளவர் சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும்  பக்குவம் அவரிடத்தில் உண்டு விட்டு கொடுத்துப் போகும் இடத்தில் அவர் இருக்கிறார். அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னைக்கு ஏன் முன்வரவில்லை என்று விளங்கவில்லை.அவர் திமுகவில் இணைந்தால் அதை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது விசிக பிரமுகர்கள் பிரபா, கிட்டு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். 

vck thol.thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe