Advertisment

'நான் அடித்துச் சொல்வேன் பாஜகவின் பங்கும் உள்ளது'-தமிழிசை ஆவேசம்

5932

tamilisai Photograph: (bjp)

பெண்கள் முன்னேற்றத்திற்காக பாஜக செய்ததை திமுகவினர் மறைத்துப் பேசுவதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ''என்னைப் பொறுத்தமட்டில் ஆன்மிகம் இன்னும் தலைக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களுக்கு பாரபட்சமாகத்தான் இந்த அரசு நடந்து கொள்கிறது என்று நேரடியாக நான் குற்றம் சாட்டுகிறேன். அங்கே கந்தூரி விழாவிற்கு கொடியேற்ற எல்லோரையும் அனுமதித்தார்கள். ஆனால் இந்துக்களை அங்கு விளக்கேற்ற அனுமதிக்காதது மிக மிக தவறு.  அங்கு விளக்கேற்றும் காலம் வரும் என்று நீதிபதியே சொல்லி இருக்கிறார் .

Advertisment

இந்துக்களை தமிழ்நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக பாவித்து தான் முதலமைச்சர் தனது எண்ணத்தை நிறைவேற்றுகிறார். நான் அடித்துச் சொல்வேன் இன்று இந்த தேசத்தில் உள்ள மகளிர் எல்லோரும் முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அது பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி. பாஜக வெற்றி பெற்று அதன் மூலம் பிரதமரான நரேந்திர மோடி தான். நம்ம தமிழ்நாட்டில் 50 லட்சம் ஜன்தன் கணக்குகள் என்று எளியோருக்கான வங்கிக் கணக்கு ஏற்பட்டதால்தான் இன்னைக்கு ₹1000 கொடுத்தாலும் நேராக வங்கிக்கு போகிறது. அதே மாதிரி 23,000 கோடி தமிழ்நாட்டில் மட்டும் முத்ரா வங்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையாக ஏறக்குறைய 63,000 பேர் பெண்கள்தான் பலனடைந்திருக்கிறார்கள். 

நாடு முழுவதும் 10 கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 10 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தொழில் முனைவோராக, ஸ்டார்ட் அப் உள்ளிட்டவற்றில் அதிகமாக பெண்கள் வந்திருக்கிறார்கள். இன்னைக்கு 12 லட்சம் வருமான வரியை ரிலாக்ஸ் செய்ததால் சாமானிய மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதனால் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 50,000 ரூபாய் அவர்கள் சேமிக்கிறார்கள். அதனால் இன்னைக்கு பெண்கள் எல்லாம் முன்னேறி இருப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் பங்கு உள்ளது.

பிரதமர் மோடியின் பங்கை புறந்தள்ளி விட முடியாது. ஆனால் திமுக எப்போது மீட்டிங்கில் பேசினாலும் பாசிச அரசாங்கம்; மகளிர்களை பாஜக முன்னேற்றவில்லை; பாரபட்சமாக பார்க்கிறார்கள் என்று எப்பொழுதுமே எங்களைக் குறை சொல்வதிலேயே முதலமைச்சர் இருக்கிறார். இதைத்  தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

dmk b.j.p dmk. mk.stalin doctor tamilisai soundararajan modi women employees
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe