புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில் இன்று (09.12.2025) காலை 11.00 மணியளவில்  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பிரச்சார வாகன பேருந்தில் நின்றபடியே காலை 11.25 மணி அளவில் விஜய் பேசினார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரியைச் சேர்ந்த, விரைவு (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்திருந்தனர். 

Advertisment

இருப்பினும் க்யூ.ஆர். கோடு இல்லாமல் வந்திருந்த த.வெ.க தொண்டர்கள் சிலர் பொதுக் கூட்டம் நடைபெறும் கேட் மீது ஏறி உள்ளே நுழைந்தனர்.  இதனையடுத்து இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகையில், “புதுச்சேரி என்றாலே  உடனே ஞாபகத்துக்கு வருவது மணக்குல விநாயகர். அரவிந்தர் ஆசிரமம். வில்லியனூர் மாதா என இவர்கள் எல்லாரும் ஞாபகத்தில் வருவார்கள். அதுமட்டுமில்லை மகாகவி பாரதியார் இருந்த மண். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண்.  அது மாதிரி இன்னும் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். 1977இல் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார்.  

Advertisment

ஆனால் அதற்கு முன்னாடியே 1974இல் புதுச்சேரியில் அவர்களுடைய ஆட்சி அமைந்தது அதனால்தான் அப்பவே சொன்னார்கள்  நமக்காக வந்தவர் எம்ஜிஆர். அவரை தமிழ்நாட்டில் மிஸ் பண்ணிராதீங்க என்று நமக்கு அலாட் பண்ணதே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியே நம்மால் மறக்க முடியுமா?. அதுமட்டுமில்லை இங்கே இருக்கிற மக்கள் தமிழ்நாடு மாதிரியே புதுச்சேரி மக்களும் என்னைக் கிட்டத்தட்ட ஒரு 30 வருஷமா  தாங்கி பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால்  விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பார் என்று நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால் அது தவறு. புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்துத்தான் குரல் கொடுப்பான். அது என்னுடைய கடமையும் கூட” எனப் பேசினார்.