வேலூர் மாவட்டம் அகரஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த 23ஆம் தேதி (23.02..2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் விஜய், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்தார். அதில், “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்குத் தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம்; இது நிஜம்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் குட்டிக் கதையை ஒன்றைக் கூறி அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதில் தமிழக அரசியல் களம் குறித்து விளக்குவதற்காக, ‘ஜல்லிக்கட்டு காளை ஒன்று மிரண்டு நின்றபோது அதற்குப் புல்லுக்கட்டை காட்டியதும் அந்த காளை அமைதியாக ஓரமாகச் சென்றது’ எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் விஜய்யின் வேலூர் பிரசாரத்தின் போது கூறிய குட்டிக் கதை தொடர்பாக, கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
அதில், “வணக்கம் விஜய் அண்ணே. இப்போதுதான் உங்கள் வேலூர் பரப்புரை வீடியோவை பார்த்தேன். வழக்கம்போல் இதிலும் ஒன்றும் இல்லை. ஜல்லிக்கட்டு காளை பற்றி ஒரு குட்டி கதை சொன்னதைக் கேட்டுவிட்டு அதற்குப் பதிலளிக்காமல் இருக்க முடியவில்லை. நீங்கள் போகிற போக்கில் ஜல்லிக்கட்டு காளை குறித்துக் குட்டி கதையைச் சொல்லிவிட்டீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களில் பல பேர் மைனர்கள். அவர்களும் ஜல்லிக்கட்டு காளைக்குப் புல்லுக்கட்டை காட்டுகிறேன் எனச் சொல்லி அதே மாதிரி செய்தால் ஏதாவது ஆகிடப்போகிறது. அப்படி நடந்தால் என்ன செய்வது. இதுவரை உயிரிழந்தவர்கள் 50ஆகவே இருக்கட்டும். அதை 500ஆக மாற்றிடாதீர்கள்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வீடியோ தொடர்பாக சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களுக்கும் ஜூலிக்கும் இடையே பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/26/tvk-vijay-juli-1-2026-02-26-10-26-18.jpg)
இந்நிலையில் ஜூலி மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோவில், “விஜய் அண்ணா உங்களின் வேலூர் பரப்புரை பார்த்து அதில் எதுவும் இல்லை என்ற ஆதங்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டேன். அதற்கு உங்களுடைய ரசிகர்கள் ஆமாம் அவர்கள் ரசிகர்கள் மட்டும்தான். ஏனென்றால் அவர்கள் இன்னும் அரசியல் வாயப்படவில்லையே. அவர்கள் எல்லா சோசியல் மீடியாவிலும் என்னை விமர்சனம் செய்கின்றனர். மைனர் சிறுவர்களிடம் இருக்கிறது முக்கால்வாசி ஃபேக் ப்ரொபைல் மட்டும்தான். அதை வைத்துத் தான் என்ன மிரட்டி இருக்கிறார்கள். அதற்காகப் பயந்து நான் அந்த வீடியோவை டெலீட் செய்யவும் மாட்டேன். என் கருத்துகளில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன்.
என்னை மிரட்டினால் கூட பரவாயில்லை. ஆனால் என்ன சார்ந்தவர்களையும் மிரட்டுகின்றனர் என்பதால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். விஜய் அண்ணா உங்களுக்கு என்னைப் பழி வாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன். இல்லை என்றால் என் ஆபீஸில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவர்களை விட்டுவிடுங்கள். நீங்கள் பனையூரை விட்டு வெளியே வர மாட்டீர்கள் அல்லவா?.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/26/juli-2026-02-26-10-26-32.jpg)
நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன். என்னைத் திட்டினால் என்ன திட்டின மாதிரிதான். மக்களை திட்டின மாதிரி எல்லாம் யாரையும் உள்ள இழுத்துப் போட மாட்டேன். ஒரு பெண்ணுக்கு சோசியல் மீடியா முக்கியமா எவ்வளவு மரியாதையும் எவ்வளவு மதிப்பும் எவ்வளவு பாதுகாப்பும் உங்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை அந்த வீடியோ கீழே இருக்கும் கமெண்ட் செக்ஷனில் நேரம் இருந்தால் படித்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us