I will hold direct talks to form a strong alliance says by EPS at the District Secretaries meeting
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (30-08-25) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க தானே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகஎடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும், வாக்காளர்கள் பட்டியலில் உள்ள இறந்தவர்கள் மற்றும் வேறு தொகுதிக்கு இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை கண்டறிந்து அவற்றை நீக்குவதில் கவனம் செலுத்துமாறு அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் முதல் 15 பூத் கமிட்டிகளை உள்ளடக்கிய கூட்டங்களை நடத்துமாறும், 118 தொகுதிகளில் தான் மேற்கொண்ட பரப்புரையில் திமுக எதிர்ப்பு அலை உருவாகி உள்ளதாகவும் அதனை பயன்படுத்தி தேர்தல் பணிகளை வேகப்படுத்த எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.