Advertisment

“எனது சொத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு அளிக்க உள்ளேன்” - வேதாந்த நிறுவனர் அனில் அகர்வால் உறுதி!

anil-agarwal-son-dad

இந்தியாவிலுள்ள மிக பெரிய பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபரும், வேதாந்த குழுமத்தின் தலைவருமான அணில் அகர்வால், கடந்த 1954ஆம் ஆண்டு பீகாரின் பாட்னாவில் பிறந்தவர் ஆவார். அவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். இவரது தந்தையான துவாரகா பிரசாத் அகர்வால் சிறிய அளவில் அலுமினியத் தொழில் செய்து வந்தார். அனில் அகர்வால் பாட்னாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்ததும், கல்லூரிக்குச் செல்லாமல், தனது தந்தையின் அலுமினியக் கடத்தி தயாரிக்கும் தொழிலில் சேர்ந்தார்.

Advertisment

அதன் பின்னர், தனது 19 வயதில் தொழில் வாய்ப்புகளைத் தேடி மும்பைக்கு சென்றார். 1970களில், அவர் சொந்தமாக சிறிய அளவிலான உலோகத்  தொழிலைத் தொடங்கினார்.  1976ல், வங்கிக் கடன் மூலம் ஷம்ஷேர் ஸ்டெர்லிங் கார்ப்பரேஷன் என்ற செம்பு உற்பத்தி நிறுவனத்தை வாங்கினார். பின்னாளில் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நிறுவினார். இது இந்தியாவின் முக்கிய செம்பு ஊருக்கு ஆலை நிறுவனமாகும். கிரண் அகர்வாலை திருமணம் செய்து கொணட அணில் அகர்வாலுக்கு, அக்னிவேஷ் என்ற மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர். தற்போது மகன் அக்னிவேஷ் இறந்தததனால் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் அணில் அகர்வால் மற்றும் அவரது குடுமபத்தினர். 

Advertisment

1976ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பாட்னாவில் பிறந்தார் அக்னிவேஷ். தனது படிப்பை மேயோ கல்லூரியில் பயின்ற அக்னிவேஷ், ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக மாறினார். பின்னாளில் உலோகத் தொழிலில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றான ஃபுஜெய்ரா கோல்ட் நிறுவனத்தை உருவாக்கினார். மேலும், ஹிந்துஸ்தான் ஜிங்கின் தலைவராகவும் பணியாற்றினார். தனது தந்தையும் தொழிலதிபர், தானும் மிகப் பெரிய தொழிலதிபராகவும் இருந்த போதிலும், எப்போதும் எளிமையானவராகவும், அன்பானவராகவும், ஆழ்ந்த மனிதநேயம் கொண்டவராகவும் இருந்தார். அதோடு, இவர் ஒரு விளையாட்டு வீரர், இசையில் ஆர்வம் கொண்ட இசைக்கலைஞரும் ஆவார்.

anil-agarwal-son-family

பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அமெரிக்காவில்,  நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அக்னிவேஷ். அவர் குணமடைந்து வருவதாக குடும்பத்தினர் நம்பினர். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அக்னிவேஷ், தற்போது மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த செய்தியைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினர், செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்த இறப்பு அகர்வால் மற்றும் அவரது மனைவி ஆகியோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த நிலையில் தனது மகனைப் பற்றி கருத்து தெரிவித்த அகர்வால், "இது எங்கள்  வாழ்க்கையின் "இருண்ட நாள். விபத்திற்குப் பிறகான சிகிச்சையில் ஆபத்தான நிலை கடந்துவிட்டது என்று நாங்கள் நம்பினோம். ஆனால் விதியோ வேறு திட்டம் போட்டுவிட்டது. இந்த இழப்பு எங்கள் குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. ஒரு மகன் தன் தந்தைக்கு முன்பாக இந்த உலகை விட்டுச் செல்லக்கூடாது. அது மிகவும் கொடுமையானது. எனது மகன் பல கனவுகளை கொண்டிருந்தார். எந்தக் குழந்தையும் பசியுடன் உறங்கக் கூடாது. எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது. ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும். 

anil-agarwal-son

ஒவ்வொரு இந்திய இளைஞரும் அர்த்தமுள்ள வேலை கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே எங்கள் கனவாக இருந்தது. தற்சார்பு இந்தியா தான் அவரின் மிகப் பெரிய கனவு. அதன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் இவ்வளவு வாழ்க்கை இருந்தது. இன்னும் நிறைவேற்றப்படாத எத்தனையோ கனவுகள் இருக்கின்றன. இருப்பினும் 49 வயதிலேயே இத்தனை கனவுகளையும் விட்டுவிட்டு போய்விட்டார். அவர் இல்லாமல் இந்த வாழ்க்கையில் எப்படி பயணிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் மகனையே எங்கள் வாழ்க்கை பாதையின்  ஒளியாகக் கொண்டு முன்னோக்கிச் செல்ல நான் முயற்சிப்பேன்” என்று கூறினார். மேலும் மகனின் பிரிவைத் தாங்க முடியாத நிலையில் உள்ள அகர்வால், மகனின் கனவையும், மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு  தனது சொத்தில் 75%ஐ மக்களுக்காக தனமாக வழங்க இருப்பதாக அணில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

dad property share son Tuticorin vedanta vedanta group
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe