உத்தரப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு நபர் ஒருவர் தனது மனைவி இரவில் நாகினியாக மாறிவிடுகிறாள், எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று கூறி குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சீதாப்பூர் மாவட்டம், லோதாசா கிராமத்தைச் சேர்ந்தவர் மெராஜ் என்பவர் தான் இந்த வினோத பகீர் புகாரை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதே பாணியில் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் நிகழ்ந்த இதே போன்ற ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஔரையா மாவட்டத்தை சேர்ந்தவர் ரீனா (20 ). கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரீனா தனது அறையில் இருந்து காணாமல் போனார். மறுநாள் காலையில் ரீனாவை எழுப்புவதற்காக அவரது தாயார் அந்த அறைக்கு சென்றுள்ளார். அப்போது உள்ளே ரீனா இல்லை.ஆனால் அறைக்குள் அவரது தாயார் கண்ட காட்சி ஒட்டுமொத்த குடும்பத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம் முந்தைய இரவு ரீனாவின் உடுத்தி இருந்த உடைகள் மற்றும் நகைகள் படுக்கையில் சிதறிக் கிடந்ததோடு படுக்கையிலேயே சுமார் ஐந்து அடி நீளமுள்ள பாம்பு தோல் கிடந்தது.
இந்த செய்தி உள்ளூர் முழுக்க பரவியது. ரீனா வடிவத்தை மாற்றும் இச்சாதாரி பாம்பு என்ற வதந்திகளால் கிராமம் அலறியது. ரீனா தூங்கிய அறையின் தரையில் ஒரு பாம்பு குழி கண்டுபிடிக்கப்பட்டதும் சேர்க்கப்பட்டது. கடந்த காலங்களில் அங்கு பாம்புகள் காணப்பட்டதாக குடும்பத்தினர் குறிப்பிட்டனர். இதனால் மனமுடைந்த அவரது பெற்றோர், தங்கள் மகளைக் கண்டுபிடிக்குமாறு காவல்துறையிடம் முறையிட்டனர்.
ஆனால் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது ஒரு இன்ஸ்டா வீடியோவிற்கு பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது. ரீனா தன்னுடைய கணவரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இரண்டு வீடியோக்களைப் பதிவேற்றி உள்ளார்.ஒரு இளைஞருடன் தோன்றி, அவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதாக அறிவிக்கிறார். எந்தவொரு கட்டாயமும் இல்லாமல் கணவரை விட்டு பிரிந்து இந்த திருமணம் முடிவை எடுத்ததாக தேர்ந்தெடுத்ததாக அந்த வீடியோவில் தெரிவித்ததோடு இருவரையும் துன்புறுத்த வேண்டாம். இந்த முடிவு தன்னுடையது மட்டுமே என்பதால், தனது பெற்றோரைக் குறை கூறவோ அல்லது எந்தப் பிரச்சினையிலும் இழுக்கவோ கூடாது என்று ரீனா கேட்டுக்கொண்டார்.
பாம்புத் தோல் படுக்கையில் கிடந்தது குடும்பத்தினரையும் காவல்துறையையும் திசைத்திருப்ப வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி என்பது தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/333-2026-02-12-21-45-49.jpg)