ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நாளை 18ஆம் தேதி (18.12.2025) காலை 11.00 மணிக்கு தவெக கட்சித் தலைவர் விஜய்யின் ‘ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை அக்கட்சியின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் கட்சி தரப்பிலும் செங்கோட்டையன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  

Advertisment

செங்கோட்டையன் இன்று (17-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஈரோடு மாவட்டம் விஜயமங்கலகத்தில் விஜய் சிறப்புரை நல்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை நான்கே நாட்களுக்குள் மிக பிரமாண்டமாக பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கடுமையான பணியை  மூன்றே நாட்களுக்குள் முடித்து சிறந்த முறையில் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற அளவிற்கு இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது'' என்றார்.

Advertisment

இந்நிலையில் அக்கட்சியின் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தார்.  அங்கு ஏற்கனவே தொண்டர்கள், ரசிகர்கள் கூடியுள்ள நிலையில் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த ஒருவரை பார்த்து நீங்கெல்லாம் நாளைக்கு வரக்கூடாது வீட்டில் டிவியில் தான் பார்க்கணும் என்றார். பின்னர் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு காரில் புறப்பட சென்றபோது அங்கு சூழ்ந்துகொண்ட தொண்டர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

அப்போது ஆதவ் அர்ஜுனாவை நோக்கி தொண்டர் ஒருவர் ''நாளைக்கு ஈரோட்டில் விஜய் பெரியாரை பற்றி மட்டும் ஒரு மணிநேரம் பேசணும். இது பெரியார் மண். பெரியாரை பற்றிப் பேசும் பேச்சில் அடுத்த கட்சிக்காரர்கள் எல்லாம் பயந்திடனும். பெரியாரின் மாவட்டத்தில் பெரியாரை பற்றி பயங்கரமா பேசணும். பெரியாரே மண்ணுனு சொன்னாங்க இல்ல. இது பெரியார் மண்ணுனு காட்டணும்'' என கோரிக்கை வைத்தார். 

Advertisment