Advertisment

'குலவிளக்கு அது இது எனச் சொல்லி பெண்களை எங்கே போய் நிறுத்தும் எனத் தெரியும்'-கனிமொழி பேட்டி

650

'I know where women will go if they say 'Kulavilakku is this'' - Kanimozhi interview Photograph: (dmk)

அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்தநாளான கடந்த 17.01.2026 அன்று  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலித்திய பின்னர்,  முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.  வாக்குறுதி 1, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும்.

Advertisment

வாக்குறுதி எண்.2, ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம். நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படும். வாக்குறுதி எண்.3, அனைவருக்கும் வீடு, அம்மா இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அது போல், நகரப் பகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி அம்மா இல்லம் திட்டம் மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதை போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் அவருடைய மகன்கள் திருமணமாகி தனி குடித்தனம் செல்கின்ற போது அரசே இடம் வாங்கி அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வாக்குறுதி எண்.4, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும். வாக்குறுதி எண்.5, ரூ.25,000 மானியத்துடன் ரூ.5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மூலம் வாகனங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Advertisment

அதிமுகவின் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குறுதி பேசுபொருளாகி இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி இதுகுறித்த கேள்விக்கு, ''எங்களுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமை திட்டம் என அறிவித்துள்ளார். அது பெண்களை அதிகாரத்திற்கு கொண்டு வரும் திட்டம். அதை மீண்டும் குலவிளக்கு அது இது என சொல்லிச் செயல்படுத்துவது பெண்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என உங்களுக்கே தெரியும்'' என்றார்.  

dmk admk edappaadipalanisamy kanimozhi karunanidhi Election manifesto
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe