Advertisment

'சிரம் தாழ்த்தி கேட்கிறேன் இந்த கூட்டணியை ஒற்றுமையா கொண்டு போங்க '- கோரிக்கை வைத்த நிர்மலா சீதாராமன்

A5043

'I humbly request you to lead this coalition in unity' - Nirmala Sitharaman requests the coalition Photograph: (BJP)

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாள் நிகழ்ச்சி இன்று சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் அதிமுகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

பாஜக சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.  தமிழக பாஜக முன்னாள் தலைவர், அதேபோல தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முன்னாள் தமிழக பாஜக தலைவரிடம் நட்பு பாராட்டும் வகையில் பக்கத்தில் அமரவைத்தார்.

Advertisment

இந்த நிகழ்வில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ''2026 ஆம் ஆண்டு வரக்கூடிய தேர்தலில் தமிழகத்தில் ஒரு பெரும் மாறுதலை எடுத்து வரக்கூடிய தேவை இருக்கிறது. அதையும் முழுமையடைய செய்ய வேண்டிய சக்தி உங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. நம்மிடமும் இருக்கிறது. ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை இந்த கூட்டணி மூலமாக எடுத்துப் போக வேண்டிய கடமை தமிழக மக்களுக்கு இருக்கிறது.

மிழ் மக்கள் நல்லாட்சி கொடுங்கள் எனக் கேட்கிறார்கள். சாராயம் வேண்டாம். ஒரே குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு ஒரு ஆதரவும் இல்லை என்ற நிலைமை வந்தபோது மக்கள் எல்லோருக்கும் தொண்டாற்றுவது நம் கடமை. அதனால் உங்கள் எல்லோருக்கும் சிரம் தாழ்த்தி கைகூப்பிக் கேட்பது இந்த கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும். கூட்டணியின் மூலமாக மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய தொண்டை ஆற்ற வேண்டும். இதில் சின்ன சின்ன உட்பூசல்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். முதிர்ச்சியடைந்த பக்குவமாக இருக்கக்கூடிய ஒவ்வொரு தலைவரும் இங்கே இருக்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து மக்களுக்கு தொண்டாற்றுவது எங்களின் பெரிய நோக்கம். எனக்கு முன்பாக பேசிவிட்டு கட்சி மீட்டிங் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி கிளம்பிவிட்டார். அவர் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லி இருக்கிறார். அதனால் நல்லாட்சி அமைய வேண்டும் எல்லோரும். ஒற்றுமையாக உழைக்க வேண்டும். அதுதான் மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாருக்கு செலுத்த வேண்டிய பெரும் அஞ்சலி'' என்றார்.

gk moopanar admk edappaadi palanisamy nda alliance Nirmala setharaman b.j.p
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe