Advertisment

'எனக்கு ஓய்வே கிடையாது'-ராமதாஸ் பேட்டி

a4284

'I have no rest' - Ramadoss interview Photograph: (pmk)

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்  அப்பல்லோ மருத்துவமனையில் திடீரெனெ அனுமதிக்கப்பட்டிருந்தார். வழக்கமான பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு வரும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும், அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

Advertisment

ராமதாஸ் மருத்துவமனையில் இருந்தபோது வந்து சந்தித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைமை நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''குறையேதும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தனக்கு ஓய்வே கிடையாது'' என தெரிவித்துள்ளார்.

Advertisment
hospital Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe