திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி அரசியலைத் தூண்டி கலவரத்தை உருவாக்க முயல்வதாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் நேற்று (22-12-25) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விசிகவினர் கலந்து கொண்டனர்.

Advertisment

மேடையில் பேசிய திருமாவளவன், 'இந்து சமூகத்தைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளுக்கு என்றாவது ஒரு நாள் பா.ஜ.கவை சார்ந்தவர்களோ, அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களோ இந்து மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களோ, இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்களோ, அனுமன் சேனா அமைப்பைச் சார்ந்தவர்களோ போராடிய சான்றுகள் உண்டா?. எந்த பார்ப்பனர் ஆவது தனது குழந்தைக்கோ பேரப்பிள்ளைக்கோ முருகன் என பெயர் சூட்டியது உண்டா? அப்படி முருகன் பெயர் வைத்த ஒரு பார்ப்பனரை கொண்டுவந்து மேடையில் நிறுத்து நான் சொல்வதை எல்லாம் கேட்கிறேன். ஏன் முருகன் என்று பெயர் வைக்க தயங்குகிறாய்'' எனப் பேசியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று மதுரை திருப்பரங்குன்றத்திற்கு வந்திருந்த பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், '' முருகன் பேர் வச்சிருக்காங்களா? கொண்டு வந்து காட்டுங்க என்று திருமாவளவன் கேட்கிறார். என்னுடைய மகனுடைய பெயரே கார்த்திகேயன் தான். கர்நாடகாவில் முருகன் இருக்கிறார். அங்கு வந்து பாருங்க எத்தனை பேருக்கு முருகண்ணா, முருகைய்யா என்று பெயர் இருக்கு தெரியுமா? அவர்கள் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான்'' என்று பதிலளித்தார்.