விவசாய சங்கத் தலைவராக இருப்பவர் பி.ஆர்.பாண்டியன். இவர் திருவாரூரில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்சிசி நிறுவனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் திருவாரூர் நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது அதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அதில் நீதிமன்றம் அவரது தண்டனையை 
நிறுத்தி வைத்தது.

Advertisment

அதை தொடர்ந்து இன்று பி.ஆர்.பாண்டியன் திருச்சி மத்திய ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயா கண்ணு, தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் அவரை மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Advertisment

அதன் பின்னர் பி.ஆர்.பாண்டியன் கூறும் போது, இந்த சம்பவத்தில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை . ஓ என் சி சி தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சம்பவம் நடந்த மறுநாள் தான் நான் அங்கு சென்றேன் என்றார். அய்யாக்கண்ணு கூறும்போது ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை உள்ளது.  விவசாயிகள் தங்கள் உரிமைக்காக போராடிய வகையில் ஏராளமான வழக்குகள் அவர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ளது அந்த வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்” என்றார்.