சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று (13.02.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா.... ஏ விஜய் பனையூரை விட்டு வெளியே வா என்று சொல்கிறவர்களுக்கு என் வீடு எதுவென்று தெரியுமா?. முதலில் என் வீடு எங்கே இருக்கிறது என்றாவது தெரியுமா?. என்னைச் சீண்டிப் பார்க்கிறதாக நினைத்துக் கிண்டலும், கேலியுமாக பேசுகிறவர்களுக்கு நான் சொல்கிறேன் இந்த தமிழ்நாடு தமிழ்நாடு என்று சொல்கிறார்களே அது மற்றவர்களுக்கு வேண்டுமானால் மாநிலமாக இருக்கலாம் ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் என் தாய் நாடான தமிழ்நாடுதான் என் வீடு.
என் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?. எட்டு கோடி பேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள். என் குடும்பம், என் உறவு, என் சொந்தம். எனக்கு எல்லாமும் கொடுத்த இந்த எட்டு கோடி சொந்தங்களுக்கு இனிமே எல்லாமுமாக கூட நிற்கப் போவது இந்த விஜய் மட்டும்தான். தமிழ்நாட்டோடா முதல் படை வீரனா தமிழ்நாட்டோட முதல் பாதுகாவலனாக அவர்கள் கூடவே நிற்க வேண்டும் என்பது தான் என்னுடைய குறிக்கோள். இன்றைக்கு இந்த விஜய் உங்கள் விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டுமே வரவில்லை.
உங்களிடம் நீதி கேட்டும் வந்திருக்கிறேன். உங்களுக்காக நீதி கேட்பதற்காகத்தான் இந்த அரசியலுக்கே வந்தேன். ஆனால் இன்றைக்கு நான் உங்கிட்ட நீதி கேட்கிறதுக்காக வந்திருக்கிறேன்.இந்த விஜய் என்ன தப்பு பண்ணினான். தன்னை நேசித்த தன்னுடைய மக்களுக்காக அரசியலுக்கு வந்தான். அது ஒரு தப்பா?. எல்லாத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு மக்களுக்காக மட்டுமே வந்தால் அது தப்பா?. இந்த மற்ற கட்சிகளுக்கு, எல்லாம் மாநாடு நடத்துகிறதுக்கோ பொதுக்கூட்டம் நடத்துகிறதுக்கோ அனுமதி கொடுப்பார்கள். இடம் கொடுப்பார்கள். ஆனால் நமக்கு மட்டும் இடம் கொடுக்க கொடுப்பார்கள். கொடுக்கவும் விடமாட்டார்கள். இது என்னங்க நியாயம்?. நான் போய் மக்களைச் சந்திக்கிறதுக்கும், மக்கள் வந்து என்ன சந்திக்கிறதுக்கோ ஒரு உரிய இடமோ இல்லை. உரியப் பாதுகாப்போ மற்ற கட்சிகளுக்கு எல்லாம் கொடுப்பார்கள். ஆனால் எனக்குக் கொடுக்க மாட்டார்கள். கொடுக்கவும் கொடுப்பார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/13/slm-tvk-vijay-speech-2026-02-13-14-07-03.jpg)
இது என்னங்க நியாயம்?. எஸ்.ஓ.பி. என்று சொல்வார்கள். அதனுடைய முழு விளக்கம் என்னவென்றால் ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் ப்ரொசிஜர். ஆனால் எனக்கு மட்டும் அது ஸ்டாலின்..... சாரி ஸ்டாலின் சார் ஆபரேட்டிங் ப்ரசிஜர். இது என்னங்க நியாயம்?. இந்த விஜய் உண்மையானவன் என்பது உங்கள் எல்லாருக்குமே தெரியும். நமக்கு எதிராகச் சதி செய்கிறது யார்?. நமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறது?. யார் நமக்கு எதிராகப் பழி போடுகிறார்கள்?. யார் யாரெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இதெல்லாம் செய்கிறார்கள் என்பது உங்கள் எல்லாருக்குமே நன்றாகத் தெரியும். அதனால் என்னோட சொந்தங்களாகிய உங்களிடம் நான் நீதி கேட்காமல் வேறு யார் கிட்டத்தான் போய் கேட்பேன்?” எனப் பேசினார்.
Follow Us