'I forgot to say that at the E.V.Velu book launch' - Rajinikanth's hilarious speech Photograph: (rajinikanth)
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவல் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் உதயசந்திரன் ஐஏஎஸ், கோபிநாத், இயக்குனர் சங்கர், நடிகை ரோகினி ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ''இதே அரங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலைஞர் பற்றி எழுதிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. முதலமைச்சர் கூட வந்திருந்தார். ஐஏஎஸ், ஐபிஎஸ், மினிஸ்டர்ஸ் என எல்லாருமே வந்திருந்தார்கள். எல்லாருமே நண்பர்கள்தான்.
நான் பேசும்போது 'ஓல்ட் ஸ்டூடென்ட்ஸ சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். அது ரொம்ப கஷ்டம். ஸ்கூலை விட்டு, கிளாசை விட்டு போகவே மாட்டார்கள்' அப்படி என்று சொல்லிட்டு வேறு ஒரு விஷயத்தையும் இறுதியில் சொல்ல நினைத்தேன் 'அப்படி இருந்தாலும்கூட ஓல்ட் இஸ் எக்ஸ்பீரியன்ஸ். ஓல்ட் பீப்பிள் எல்லாம் தூண்கள். அவர்களெல்லாம் பவுண்டேஷன். அந்த மாதிரி அனுபவசாலிகள் இல்லையென்றால் எந்த இயக்கமும், எந்தப் பார்ட்டியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல சிகரம்' என சொல்ல வேண்டும் நினைத்தேன். ஆனால் எல்லாரும் சிரிப்பில் கைத்தட்டியுடன் அதைச்சொல்ல மறந்து விட்டேன். என்னடா இது என ஆகிவிட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வரும்போதே மனசுல 'மிஸ்டர் ரஜினிகாந்த் நல்லா பாரு. இந்த மாதிரி மிஸ்டேக் பண்ணிடாத. எல்லாரும் உன்னோட ரசிகர்களென்று நினைச்சுக்காத. பார்த்தா தெரியுது சில பேரு மனசில் ஓடுது. சங்கர் சார் படம் எடுக்கிறார் அவரை கூப்பிட்டு இருக்காங்க. உதயசந்திரன் ஒரு எழுத்தாளர் மாபெரும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கோபிநாத் பற்றி உங்களுக்கு சொல்லவே தேவையில்லை அவருடைய பேச்சு பற்றி. ரொம்ப அறிவாளி. ரோகிணி சமூகத்தின் மேல் அக்கறை உள்ளவர். இவர்களெல்லாம் பேசுகிறார்கள்.
ஒரு ஆர்ட்டிஸ்ட், ஒரு ஹீரோவை கூப்பிட வேண்டும் என்றால் சிவகுமார் இருக்கிறாரேப்பா. அருமையா எவ்வளவோ பேசுவாரு. எவ்வளவோ படிச்சிருக்காரு. மகாபாரதத்தை 6 மணி நேரம் கண்டினியூசா பேசுவார். அவரை விட்டா கமல்ஹாசன் எவ்வளவு அறிவாளி. எவ்வளவு படித்திருக்கிறார். அவரை கூப்பிட்டு இருக்கலாம். அதெல்லாம் விட்டுவிட்டு 75 வயசிலும் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர இந்த ஆள கூப்பிட்டு இருக்கிறார்கள்' என நினைப்பாங்க ஜாக்கிரதைப்பா'' என்றார்.