திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது மாணவி ஒருவர், தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் படித்து வந்த அதே கல்லூரியின் முன்னாள் மாணவரான மோனோஜித் மிஸ்ரா (31) என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாதிக்கப்பட்ட மாணவியை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், வேறு ஒரு நபரை காதலித்து வந்ததால் அந்த மாணவி அதனை ஏற்க மறுத்துள்ளார்.

 

a4237
'I fell on my feet but didn't let go' - the student's chilling confession Photograph: (kolkatta)
Advertisment

 

இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் 25ஆம் தேதி தேர்வு தொடர்பான படிவங்களை நிரப்புவதற்காக அந்த மாணவி கல்லூரிக்கு வந்துள்ளார். இதைத்தெரிந்து கொண்ட மோனாஜித் மிஸ்ரா, தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஜைப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி ஆகியோரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதனை நிராகரித்ததால் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாவலர் அறைக்குள் மாணவியை அடைத்து வைத்து மோனாஜித் மிஸ்ரா வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனைத்  தொடர்ந்து, மோனாஜித்துடன் வந்த மற்ற இரண்டு நபர்களும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற அனுமதித்துள்ளார். அதனை தொடர்ந்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் பிரிவான திரிணாமுல் காங்கிரஸ் சத்ரா பரிஷத்தின் தெற்கு கொல்கத்தா மாவட்ட பிரிவின் பொதுச் செயலளராக பணியாற்றும் மோனாஜித் மிஸ்ரா மற்றும் ஜைப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் அலிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் அக்கல்லூரியின் காவலாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். பலமுறை அப்பெண் உதவி கேட்டும் பாதுகாப்பு அளிக்க தவறியதாக காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

 

a4238
'I fell on my feet but didn't let go' - the student's chilling confession Photograph: (Kolkata)

 

இந்நிலையில் இந்த சம்பவத்தில் கொடூரமாக பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 'தன்னை விட்டு விடும்படி காலில் விழுந்து கெஞ்சியும் அவர்கள் தன்னைவிடவில்லை. என்னுடைய காதலனை கொன்று விடுவதாக மிரட்டினார்கள். இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து இது குறித்து யாரிடமாவது கூறினால் காதலனை காயப்படுத்திவிடுவதாகவும், பெற்றோர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவதாகவும் மிரட்டினர்' என தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் பொதுச்செயலாளர் என்பதால் இந்த வழக்கு மேற்குவங்கத்தில் அரசியல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.