பழைய நினைவுகளை அசைப்போடும் விதமாக பல வருடங்களுக்கு முன்பு படித்த பள்ளியில் அப்போதைய மாணவர்களாக இருந்து இன்று மனைவி, கணவன், குழந்தைகளுடன் குடும்பமாக இருப்பவர்கள் ஒன்று கூடி சந்தித்து மகிழும் நிகழ்வுகள் பல இடங்ளிலும் இனிதே நடக்கிறது. 

Advertisment

அந்த வகையில் புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் ஆர்.சி  நடுநிலைப் பள்ளியில் 1995 முதல் 2005 வரை படித்த மாணவ, மாணவிகள் சந்திக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த 90ஸ் கிட்ஸ்கள் முடிவெடுத்தனர். இதற்காக 3 மாதங்களுக்கு முன்பு ஒரு வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி ஒவ்வொருவராக சேர்க்கும் போது தான் தெரிந்தது நம்மோடு படித்த நண்பர்களில் 10 பேர் இறந்துவிட்டார்கள் என்று. ஓரளவு அனைவரையும் தொடர்பிற்குள் கொண்டு வந்த பிறகு நேற்று (27.12.2025 - சனிக்கிழமை) பள்ளியில் சந்திக்க நாள் குறிக்கப்பட்டது.

Advertisment

pdu-90s-shop

நம் பழைய நண்பர்களை 20 வருடங்களுக்கு பிறகு பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் வெளிநாடு, வெளியூர்களில் உள்ளவர்களும் ஒவ்வொருவராக தங்கள் மனைவி, கணவர், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக வர சிலர் தனியாகவும் வந்தனர். பள்ளி வளாகத்தில் நுழைந்தவர்களுக்கு வரவேற்பை கடந்த போது அங்கு போடப்பட்டிருந்த தற்காலிக கடையில் 90 காலக்கட்டத்தில் உள்ள தேன்மிட்டாய், சவ்வுமிட்டாய், கல்கோணா, பொறி உருண்டை, எலந்தைபழம் சூஸ் என 90 ஸ் கிட்ஸ் திண்பண்டங்கள் அத்தனையும் பார்த்த போது மகிழ்ச்சியில் நெகிந்து போனார்கள். 

pdu-90s

பல வருடங்களாக பார்க்காதவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக் கொண்டதோடு பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆசிரியர்களுடன் குழு படங்கள் எடுத்துக் கொண்டவர்கள் பள்ளிக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர். 

Advertisment

இந்த சந்திப்பு எப்படி என்ற போது, தித்திப்பு என்றவர்கள், நாங்க 25 காசு, 50 காசு ஒரு ரூபாய்க்கு வாங்கித் திண்ண தேன் மிட்டாயும், ஆரஞ்சு மிட்டாயும் இப்ப பார்க்கும் போதே வாய்ல எச்சில் ஊறுதுங்க. கல்கோணா வாங்கி காக்கா கடி கடிச்சு திண்ணதும் ஒரு எலந்தை சூஸ் பாக்கெட் வாங்கி ரெண்டு  மூனு பேரும் சப்பிச்சப்பி திண்டுட்டு கடைசியில அந்த கவரைக்கூட கடிச்சு மென்னு துப்புனதும் அனுபவிச்சா தான் சார் தெரியும் என்றனர் மகிழ்ச்சியாக.