கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மகாபலிபுரத்திற்கு வரவழைத்து இன்று (27-10-25) தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Advertisment

இந்த சம்பவத்தில் முன்னதாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் தவெக சார்பில் கடந்த 18 ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஏற்றப்பட்டது.  அதன்படி கோடாங்கிபட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் குடும்பத்திற்கு நடிகர் விஜய் 20 லட்சம் ரூபாய் அனுப்பி இருந்தார். அண்மையில்  வீடியோ காலில் பேசிய பொழுது 'உங்களை நேரில் சந்திப்பேன்' என விஜய் தெரிவித்திருந்தார். இன்று மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து விஜய் சந்தித்திருந்தார்.

Advertisment

கோடங்கிபட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மகாபலிபுரம் செல்லவில்லை. இறந்தவரின் அக்கா பூமதி, அவருடைய கணவர் அர்ஜுனன் ஆகியோர் சென்றனர். இந்நிலையில் ரமேஷின் மனைவி சங்கவிக்கு தெரியாமல் சென்ற காரணத்தினாலும், விஜய் நேரில் வராத காரணத்தினாலும் வங்கிக் கணக்கில் செலுத்திய 20 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் திருப்பி அனுப்பியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.