ஈரோடு வளையக்கார வீதியைச் சேர்ந்த கார் டிரைவர் சந்திரன். இவரது மனைவி முத்துமணி (23). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு, துணி வாங்குவதற்கு வந்த மதுரையை சேர்ந்த கவின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை சந்திரன் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி வீட்டை விட்டு சென்ற முத்துமணி இதுவரை வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

Advertisment

கடந்த 1ம் தேதி, வாட்ஸ் ஆப் மூலம், உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்றும் கவினை திருமணம் செய்துக் கொண்டதாகவும், சந்திரனுக்கு முத்துமணி வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து சந்திரன் அளித்த புகாரின் பேரில், ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

இதேபோல் சென்னிமலை பூங்கா நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி செல்வி (32) இத்தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த செல்விக்கு, அங்கு வேலை செய்யும் சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு சுதர்சனுடன் செல்வி சென்று விட்டதாகவும், பின்னர் சமாதானம் செய்து மணிவண்ணன் மீண்டும் அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வி இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.