Advertisment

'நான் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

827

'I don't see anyone as an enemy' - Interview with Chief Minister M.K. Stalin

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

இன்று காலை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு திமுக அமைதிப் பேரணி மேற்கொண்டது. மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடம் நோக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலரும் அமைதிப் பேரணியாக நடந்து வந்து அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் முதல்வர் தன் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்றார்.

Advertisment
அங்கு  சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் 'புதிய எதிரிகளை எப்படி பார்க்கிறீர்கள்?' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ''யாரையும் நான் எதிரியாகப்  பார்ப்பதில்லை. நண்பராக தான் பார்க்கிறேன். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேச்சு வார்த்தை தொடங்கும்'' என்றார்.
dmk dmk. mk.stalin politics tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe