நெல்லையில் இன்று சுற்றுப்ம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அங்குள்ளதனியார் ஹோட்டல் ஒன்றில், விவசாய மற்றும் வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து உரையாடினார். அந்த சந்திப்பில் தங்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்திப் பேசினர். அதனையெல்லாம் குறித்துக் கொண்டு விட்டு,அவர்களிடம் பேசிய இபிஎஸ்,‘’இயற்கை விவசாயத்தில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசினீர்கள். நாம் உடல்நலத்தோடு வாழ்வதற்கு இயற்கை விவசாயம் மூலம் விளையும் உணவுகளை அதிகம் உண்ண வேண்டியது அவசியம். அப்போதுதான் எந்த நோயும் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். இன்று இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வந்துள்ளது.

அதிக விலை கொடுத்து இயற்கை பொருட்களை வாங்குகிறார்கள். அதிமுக அரசு அமைந்த பிறகு இயறகை விவசாயத்துக்கு முடிந்த அளவில் உதவி செய்வோம்.பாபநாசம் மணிமுத்தாறு, தாமிரபரணி நதிகளில் இருக்கிற வண்டல் மண்ணை தூர் வார வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் ஏரி கண்மாய்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தூர் வாரப்பட்டன. இன்று பொதுப்பணித்துறையின் கீழ் 14 ஆயிரம் ஏரிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 24 ஆயிரம் குளம், குட்டைகள், ஏரிகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான ஏரிகளை நாங்கள் தூர் வாரினோம். அதற்காக அதிமுக ஆட்சியில் 1,240 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. நிறைய இடங்களில் கால்வாய்களை கான்கிரீட் கால்வாய்களாக மாற்றிக் கொடுத்தோம். பல இடங்களில் தடுப்பணைகள் கட்டினோம். இடையிலே வந்த அரசு 2 ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்டுவதாகச் சொன்னார்கள்.இதுவரை ஐந்தாறு தடுப்பணைகளை மட்டும் அறிவித்துவிட்டு எஞ்சியதை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

Advertisment

விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் நீர் உயிராக இருக்கிறது. அதனால் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம்.அம்மா இருக்கும்போது எனக்கு பொதுப்பணித்துறையை ஒதுக்கீடு செய்தார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தி ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறைபொறியாளர்களை அதில் உறுப்பினர்களாக நியமித்தோம்.

தமிழ்நாடு முழுதும் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து எந்த நதிகளில் நீர் வீணாகிறதோ அங்கெல்லாம் தடுப்பணை கட்டுவதற்கு ஆலோசனை கொடுத்தார்கள். அதன்படி பல இடங்களில் தடுய்ப்பணைகள் கட்டினோம். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினோம். பொறியாளர்கள் எங்கெல்லாம் அணை கட்ட முடியும் என்று ஆய்வு செய்து அறிக்கை தந்தார்களோ அங்கெல்லாம் நடவடிக்கை எடுத்துவந்தோம்.

Advertisment

இந்த சூழலில் ஆட்சி மாற்றம்ஏற்பட்ட பிறகு அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்களை, அர்ப்பணிப்போடு பணியாற்றக் கூடியவர்களைத் தேர்ந்தெடுத்து நீர் மேலாண்மை பணியில் ஈடுபடுத்தினோம். அவர்கள் மூலம் பல இடங்களில் நீரை சேமிக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தினோம்.

திமுக ஆட்சியில்தான் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடனை 5 ஆண்டுகளில் 2 முறை தள்ளுபடி செய்தோம். விதை மானியம், நடவு மானியம் கொடுத்தோம். பயிர் காப்பீடு திட்டம் மூலம் அதிக எண்ணீக்கையிலான விவசாயிகளுக்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தது அதிமுக அரசு.

நான் டெல்டா பகுதிகளுக்குச் சென்றபோது, கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் கொண்டுவந்து விவசாயிகள் கடன் வாங்க முடியாத சூழல் நிலவுவதாக என்னிடம் புகார் கூறினார்கள்.கடன் வாங்க பல்வேறு சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டி இருப்பதாகவும், ரிசர்வ் வங்கி விதிப்படி அதை கேட்பதாக என்னிடம் கூறினார்கள். இதுபற்றி பிரதமர் திருச்சிக்கு வந்தபோது கோரிக்கை வைத்தேன். அவரிடம் கோரிக்கை மனு கொடுத்த அடுத்த நாளே, மாநில அரசு வேண்டுமென்றே திட்டமிட்டுவிவசாயிகளுக்குக் கொடுக்கும் கடனை தாமதப்படுத்த இப்படி ஒரு விதியை புகுத்தியிருப்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து அடுத்த நாளே விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் பெறவேண்டாம் என்று அரசு சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது

இந்த அரசு திவால் ஆகிவிட்டது. அதனிடம் பணம் இல்லை. அதனால்தான் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க பணம் இல்லாமல் சிபில் ஸ்கோர் என்று ஏதாவது ஒரு விஷயத்தை வைத்து அவர்களை அலைக்கழித்தது. இதுபற்றி நான் பிரதமரிடம் கோரிக்கை வைத்ததும் தமிழக அரசு சிபில் ஸ்கோர் கேட்பதை ரத்து செய்துள்ளது.

விவசாய நிலங்களை காக்கவும், மீத்தேன், ஈத்தேன் போன்ற திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் பாதுகாக்கப்பட்ட வேலாண் மண்டலங்களை கொண்டுவந்தோம். மும்முனை விவசாயம் வழங்கினோம். இப்போது ஷிஃப்ட் முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

கட்டிடத் தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு நிதி கொடுத்தோம்.கொரோனா காலத்தில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்கினோம். அவர்களை பல்வேறு வழிகளில் பாதுகாத்தோம். அதிமுக ஆட்சி வந்ததும் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

2017-ல் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்ததும் அதிமுக ஆட்சிதான். கொள்முதல் நிலையங்கள் நெல்லை கொள்முதல் செய்ய தாமதம் ஆவதால், பல இடங்களில் நெல் மணிகள் திறந்தவெளியில் போட்டுவைக்கப்பட்டு சேதமடைவதாக கூறினார்கள், அதிமுக ஆட்சி வந்ததும் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

விவசாயக் கருவிகளை வாங்கவும், சொட்டுநீர் பாசன கருவிகளை வாங்கவும் அதிக மானியம் கொடுத்தோம். திமுக ஆட்சிக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் தருவதாக சொன்னார்கள். இதுவரை அதை கொடுக்கவில்லை.

வணிகர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார்கள். அதிமுக ஆட்சி இருந்தபோது சட்டத்தின் ஆட்சி நடந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நான் முதல்வராக இருந்தவரை யாருடைய தலையீடும் இல்லை. இந்த ஆட்சியில் இருக்கும் குறைபாடுகள் முதல்வருக்கே தெரியாது. திடீரென்று எழுந்து கேள்வி கேட்டால் முதல்வருக்கு பதில் சொல்லத் தெரிவதில்லை.

முதல்வர் என்றால் அதிகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனக்கு அதில் ஆர்வம் இருந்தது. குறிப்பாக விவசாயம், வணிகர்கள் பிரச்சினையில் ஆர்வம் இருந்தது. எங்கள் ஆட்சியில் வணிகர்களை வாட்டி வதைக்கவில்லை. இன்று அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறினார்கள்.அதிமுக ஆட்சிக்கு வந்தால் முறையாக வரி கட்டும் வணிகர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்…’’ என்று நம்பிக்கை கொடுத்தார்.