sarathkumar Photograph: (bjp)
நடிகர் சரத்குமார் இன்று நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
'நடிகர் விஜய்க்கு நீங்க சொல்ல வேண்டிய அறிவுரை என்ன?' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய சரத்குமார், ''நான் அறிவுரை சொல்ல முடியாது பாஸ் அவர் வளர்ந்த நடிகர். அவருக்கு நான் என்ன அறிவுரை சொல்வது. அரசியல்வாதியாக இன்னும் விஜய்யை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் ஃபீல்டுக்கு வந்துருக்கார். இனிமேல் தான் அவர் கொள்கை என்ன கோட்பாடு என்ன இதெல்லாம் கேட்டால் பெரிய பிரஸ் மீட் தர வேண்டும். அவர் சொல்லும் விஷயங்கள் சாதாரண விஷயங்கள் கிடையாது. நிறைய விஷயம் சொல்கிறார். பொருளாதாரத்தை மேம்படுத்தி எல்லோருக்கும் வீடு வசதியை உருவாக்குவோம் என்று சொல்கிறார். எப்படி என்று நான் கேட்கிறேன். காரணம் தமிழகம் 10 லட்சம் கோடி கடனில் உள்ளது. எப்படி மீண்டு வருவாங்க?
இலவச வீடு கொடுங்க வேண்டாம் என்று யார் சொன்னது? இந்த கடன் சூழலில் எப்படி கொடுப்பீர்கள் என்று நான் கேட்கிறேன். நான் இந்த உயிரைக் காப்பாற்றுவேன் என்று சொன்னால் அது எப்படி? யாராலும் முடியாத இந்த உயிரை எப்படி காப்பாற்றப் போகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு மருத்துவம் இதுதான் என்று சொல்ல வேண்டும். பிரச்சனையை சொல்வதை விட அதைத் தீர்க்க என்ன தீர்வு என்ன என்பதைச் சொன்னால் நான் ரொம்ப சதோஷப்படுவேன். மக்கள் சந்தோசப்படுவார்கள்.
விஜய் இன்று வந்தவர். இதைவிடப் பெரிய பெரிய இயக்கங்கள் பெரிய பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். அவரை பற்றி நீங்கள் சுட்டிக்காட்டி கேட்டீர்கள் என்று சொன்னால் நான் பதில் சொல்லக் காத்திருக்கிறேன். விஜய் வரட்டும், தேர்தல் பிரச்சாரத்துக்குப் போகட்டும். இந்த மாதிரி கேள்வி கேட்க வையுங்கள் முதலில். நீங்களே ஒருவரை பெரியவராக உருவாக்காதீர்கள்'' என்றார்.
Follow Us