'I didn't see it anyway' - Selva Perundakai interview Photograph: (congress)
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''எங்களுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவராக காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றியவர் வாழப்பாடி ராமமூர்த்தி. இன்று அவருக்கு 23ஆவது நினைவேந்தல். இந்த நினைவேந்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அவருக்கு புகழஞ்செலியும் மலரஞ்சலியும் செலுத்தி அவருடைய பெருமையை பதிவு செய்கிறோம்.
இந்திரா காந்தி காலத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தியின் அன்பு பெற்றவர். சோனியா காந்தியின் நம்பிக்கைகுரிய தலைவராக இருந்தவர். தொழிலாளர்களுக்கு என தொடர்ந்து குரல் கொடுத்தவர். பலமுறை ஐநா சபையில் பேசியவர். வெளிநாடுகளில் பல நாடுகள் அவருக்கு குடியுரிமை கொடுத்த போதும் கூட அதை மறுத்தவர். இப்படி பல்வேறு பெருமைக்குரியவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எங்கே இருக்கிறது என்று கேட்கும் பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது என்பதை ஒரு வீரியமாக தெரிவித்து தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வளர்ச்சிக்கு வழிகாட்டி தலைவராக திகழ்ந்தவர் தான் வாழப்பாடியார். அமைச்சராக முதல் முறை மத்திய அமைச்சராக ஆவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டு நலன் கருதி தமிழ்நாட்டு மக்கள் தலைநிமிர வேண்டும் என்பதற்காக காவிரி பிரச்சனையில் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தவர் தான் வாழப்பாடி ராமமூர்த்தி'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு வரை வரவழைத்ததை எப்படி பார்க்கிறீர்கள்' என்ற கேள்விக்கு ''அதை எப்படியும் பார்க்கவில்லை'' என்றார்.
Follow Us