ஈரோடு வீரப்பன் சத்திரம் அடுத்த பெரிய சேமூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மூன்றாவது மகன் ஹரி (19). ராஜா டைல்ஸ் ஒட்டும் வேலைபார்த்து வந்தார். ஹரி அலுமினிய கதவு, ஜன்னல் சரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் அந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ஹரி சரியாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். தனது தந்தையிடம் வேறு ஒரு நல்ல வேலை இருந்தால் பார்த்து சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் நேற்று ஹரி வீட்டில் இருந்துள்ளார். அவரது தாய், தந்தை வேலைக்கு சென்று விட்டனர். மாலை வேலை முடிந்து ஹரியின் தாய் வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஹரி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisment

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஹரியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ஹரி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.