''பத்திரப்பதிவு கூட நினைக்கும் நேரத்தில் இந்த ஆட்சியில் செய்ய முடியாது. மக்கள் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்'' என சசிகலா பேசியுள்ளார்.

Advertisment

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலா பேசுகையில், ''திமுக ஆட்சி செய்வதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். சட்ட ஒழுங்கு சுத்தமா மேலே காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. எல்லா இடத்திலும் மோசம் தான். எதையுமே அவர்கள் சரிவர கவனிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் முதலில். ஒண்ணுமே தெரியாமல் இந்த காலத்தில் அரசாங்கத்தையெல்லாம் நடத்த முடியாது.

Advertisment

நீங்கள் டிவியில் வேண்டுமானால் விளம்பரம் கொடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற பார்க்கலாம். எனக்கு தெரிந்து இனி மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ரேஷன் கடைக்கு போனால் பிரச்சனை. நீங்கள் ஏதாவது பஞ்சாயத்துக்கு வேலைக்கு சென்றால்கூட கையில் பணம் வைத்துக் கொண்டுதான் போக வேண்டும். பத்திரப்பதிவும் செய்ய முடியல. பத்திரப்பதிவு செய்யப் போனா பணம் கொடு, கமிஷன் கொடு பதிவு பண்ணித் தருகிறோம் என்கிறார்கள். அப்படி அந்த இடம் அவர்களுக்கு பிடித்துப் போய்விட்டால் யார் கொடுக்கிறார்களோ அவர்களை தொடர்பு கொண்டு பத்திரப்பதிவை கேன்சல் பண்ணுங்க நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லி பத்திரப்பதிவை கூட நீங்கள் நினைத்த நேரத்தில் போய் பண்ண முடியாது. இதனால் நிறையப் பேர் கஷ்டப்படுகிறார்கள்'' என்றார்.