திமுகவின் ஆதரவுடன் தான் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சர் ஆனதாக அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார்.
திருவண்ணாமலையில் கலைஞரின் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு கலந்து கொண்டார். மக்களுக்கு தையல் மெஷின், இட்லி பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கிய அவர் மேடையில் பேசுகையில், ''திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றிக் காட்டினார் என யாராவது நிரூபித்தால் தான் அரசியல் பொதுவாழ்க்கை விட்டே விலகுகிறேன்.
அன்புமணியும் ஸ்டாலினும் எனக்கு வேறு இல்லை. அன்புமணியை என் பையனாக பார்க்கிறேன். நானும் கையெழுத்துப் போட்டேன் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவதற்காக கையெழுத்துப் போட்ட 10 எம்எல்ஏக்களில் அடியேன் எ.வ.வேலுவும் ஒருவன். கையெழுத்தும் இருக்கிறது. ரெக்கார்டில் இருக்கும். இந்தியாவிற்கே மந்திரியாக இருந்த அன்புமணி தன இந்த திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செய்த ஒன்றை நீங்கள் சொல்லுங்கள். நான் பொது வாழ்க்கையை விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.