தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஈரோடு பெருந்துறை சுங்கச்சாவடி சரளை அருகே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

பின்னர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ''தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள இடத்திற்கு வரும் 18ஆம் தேதி வருகை தர உள்ளார். நிகழ்ச்சி காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகிறோம். அரசு அலுவலர்கள் கேட்டது போல  பல்வேறு பணிகளை நிறைவேற்றி தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்னென்ன ஆலோசனைகளை சொல்கிறார்களோ அதை ஏற்று செய்வதற்கு தயாராக இருக்கிறோம் இந்நிகழ்ச்சி பாண்டிச்சேரிக்கு பிறகு தமிழகத்தில் முதன்முறையாக ஈரோடு வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சி வரலாறு படைக்கும் வகையில் இருக்கும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வருபவர்களை வரவேற்கிறோம். யாரைக் கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தலைவர் விஜய் முடிவு செய்வார்

Advertisment

தவெக அதிமுகவாக மாறும் என்று நான் சொல்லவில்லை. தவெகவில் பல பேர் இணைய வாய்ப்பு உள்ளது. விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை'' என்றார்.

பிரச்சாரத்தில் யாரேனும் கட்சியில் இணைவார்களா? என்ற கேள்விக்கு, ''பொறுத்து இருந்து பாருங்கள். நேற்று மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் எல்லாரையும் இணைப்போம். எல்லாரும் ஒற்றுமையாக இருப்போம் என்று பேசினேன் நான் தேர்தல் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கு என்பது தனியான ஒன்று அதற்கும் நான் தவெகவில் இணைந்தையும் இணைத்துக் கொள்ள கூடாது. நான் விருப்பப்பட்டு தவெகவில் இணைந்து இருக்கிறேன். எம்ஜிஆர் காலம் முதல் இருக்கிறேன் உயர் மட்டக்குழு வரை இருந்தேன். புதிதாக வந்தவர்கள் என்னை நீக்கம் செய்து இருக்கிறார்கள். 252 பக்கம் என்ன 2500 பக்கம் கொடுத்தால் என்ன பார்த்து கொள்ள வேண்டியது தான். இதனால் இதில் தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். தெளிவாக விளக்கம் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். இது போன்று 7 வழக்கு நிலுவையில் உள்ளது. என்னை வரவேற்று வாழ்த்தும், என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்வதால் தவறில்லை. தவெகவில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்தனோ அப்படி தான் தவெகவில் இருக்கிறேன்'' என்றார்.

Advertisment