'Hydroponic trapped at Chennai airport' - Officials shocked Photograph: (airport)
வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு குறிப்பாக ஆந்திராவில் இருந்து ரயில் மற்றும் வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு பிடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்து வருவது போல பத்து கிலோ உயர் ரக கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வடமாநில பயணி ஒருவர் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அவருடைய உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவருடைய லக்கேஜ் பேக்கில் இருந்த உணவுப் பொருட்களை ஆய்வு செய்த பொழுது உணவு பொருட்கள் வைக்கப்பட்ட பாக்கெட்டுக்குள் ஹைட்ரோபோனிக் கஞ்சா எனும் உயர்ரக கஞ்சா மறைக்க வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் சம்பந்தப்பட்ட வடமாநில நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us